கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஓடைக்குள் இறங்கி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் . பொதுமக்கள் பாராட்டு
நகராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறையினரின் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோபால் சுந்தர்ராஜ் கடையநல்லூர் பாப்பான் கால்வாய் ஓடைக்குள் இறங்கி சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் ஓடைக்குள் இறங்கி சென்று ஆய்வு செய்ததை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
இது பற்றிய விபரமாவது தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை மற்றும் தென்காசி நகராட்சிகளிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மாநகராட்சிகளிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவுப்படி ஆசாதி கா ஆம்ரிட் மகோத்ஸ் வ் (AKAM) என்ற குறிக்கோளோடு 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது இந்தத் திட்டத்தின் நோக்கம் குப்பைகளை வீடு தேடி சென்று தரம் பிரித்து வழங்க வேண்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்துவது ஊக்கப்படுத்துதல் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு பொருட்களை கொண்டு கலைப் பொருட்களை உருவாக்குதல் மேலும் துப்புரவு பணியாளர்களை கௌரவித்தல் போன்ற கொள்கைகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இதன்படி நேற்று கடையநல்லூர் நகராட்சியில் ஆணையாளர் (பொ) பாரிஜான் சுகாதார அலுவலர் நாராயணன் ஆய்வாளர்கள் சக்திவேல் சிவா மற்றும் தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி சரண்யா ரம்யா சுப்புலட்சுமி ரோகிணி ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடையநல்லூருக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் கோபால் சுந்தர்ராஜ் துப்பரவு பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பாப்பான்கால்வாய்க்குள் காரை விட்டு இறங்கி விர்ரென நடந்து சென்றார். அரசு மருத்துவமனை பேரூந்து நிலையத்தில் நின்ற பயணிகளும் பாதசாரி பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரின் செயல் கண்டு ஆச்சர்யமடைந்து வியந்தனர். ஏற்கனவே தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப் பாளர் கிருஷ்ணராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு குற்ற செயல்களை தடுக்கும் நோக்கில் தனிவாட் சப் 9385673 089 என்ற எண்ணில் தகவல் தரலாம். தகவல் தருபவர்கள் பெயர் ரகசியம் காக்கப்படும் என அறிவித்ததற்கு நல்ல பயன் கிடைத்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் செயலால் பொதுமக்கள் மத்தியில் உயர் அதிகாரிகளின் மீது மதிப்பும் மரியாதை யும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் ஒடைக்குள் இறங்கியது எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக ஏற்படும் பிரச்னைகளை சீர் செய்யும் வகையில் ஆறு குளங்களுக்கு . அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரால் கரைகள் உடைந்து பொது மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று விடக் கூடாது என்பதும் ஆற்றின் கரைகள் பலமாக உள்ளதா என ஆய்வு செய்ததாக என தெரிகிறது

