வனஉயிரின வார விழா – கோடியக்கரை கடற்கரையை சுத்தம் செய்த வனத்துறையினர்
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் வனஉயிரின வார விழாவையொட்டி வனத்துறையினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆண்டு தோறும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இருந்த குப்பைகளை கோடிக்கரை வனத்துறை அலுவலர்கள் மற்றும் சதுப்பு நில நண்பர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியை கோடிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை சித்தர் கோயில் கடற்கரை முதல் படகுத் துறைமுகம் வரை கடற்கரை ஓரத்தில் கிடந்த குப்பைகளை இக்குழுவினர் அகற்றினர். கோடிக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் வனவர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் , ரவிபாரதி , நித்திய ஜீவா உள்ளிட்ட வனத்துறையினரும் சதுப்புநில நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்



