• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

policeseithitv by policeseithitv
October 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் – பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா பக்கவாரா மூன்றாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் .அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.10.2021) தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்ட செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பச்சளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் சிறப்பு உயர்தர சிகிச்சை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய்.72000 கீழ் குறைவாக உள்ளவர்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் மையத்தில் ஆவணங்களை கொண்டு விண்ணப்பித்து புகைப்படத்துடன் கூடிய இ-கார்டு பெற்று கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,00 வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 3,49,302 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 72,080 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேதாரண்யம், கருப்பம்புலம், திருக்குவளை, நாகூர் ஆண்டவர் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் காமேஷ்வரம் கோஹஜ், நாகை மருத்துவமனை, அன்சாரி மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிறப்பாக சிகிச்சை அளித்ததற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் டாக்டர் தனசேகரன், மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் உதயச்சந்திரன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது. உயர்தர சிகிச்சை பெற்றதற்கான 5 நபர்களுக்கு காது குறுத்தெலும்பு மாற்று, இருதய அறுவைசிகிச்சைக்காகவும், சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்காகவும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
வேதாரண்யம் அகஸ்த்தியன் பள்ளி, நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கெம்ப்ளாஸ்ட் சன்மார் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிநவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியை கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் (பொ) மருத்துவர்.ராஜா, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் விஜயகுமார், மாவட்டச்செயலாளர் கௌதமன் துணை இயக்குநர் குடும்ப நலம் மருத்துவர். அமுதா, முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு மாவட்ட திட்ட அலுவலர் லோகநாதன், வேதாரண்யம் அரசு மருத்துவமனை மருத்துவர். முருகப்பன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை

Next Post

பெரியகுளம் டி.எஸ்‌‌‌.பி முத்‌‌‌துக்‌‌‌குமார்‌‌‌ தலைமையில் அனைத்து ஊர் சமுதாய தலைவர்களையும் அழைத்து தீவிர ஆலோசனை

Next Post
பெரியகுளம் டி.எஸ்‌‌‌.பி முத்‌‌‌துக்‌‌‌குமார்‌‌‌ தலைமையில் அனைத்து ஊர் சமுதாய தலைவர்களையும் அழைத்து தீவிர ஆலோசனை

பெரியகுளம் டி.எஸ்‌‌‌.பி முத்‌‌‌துக்‌‌‌குமார்‌‌‌ தலைமையில் அனைத்து ஊர் சமுதாய தலைவர்களையும் அழைத்து தீவிர ஆலோசனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In