• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

policeseithitv by policeseithitv
October 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலில் வலம் வருகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ந் தேதி நள்ளிரவில் நடக்கிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெறுகிறது. இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழா நடைபெறும் 12 நாட்களில் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் அனுமதி கிடையாது. அதாவது, திருவிழா நடைபெறும் 12 நாட்களில் 5 தினங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. திருவிழாவில் தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

குமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்பு

Next Post

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது

Next Post
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  தொடங்கியது

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In