அடிக்கடி அக்கா வீட்டுக்குப் போகும் மனைவி மீது சந்தேகம் வந்ததால் அவரின் செல்போனை எடுத்து ஆய்வு செய்த கணவன் அதிர்ந்து போயிருக்கிறார். தன் மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அவர் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனுசாமி என்பதும், அரைநிர்வாணத்துடன் வீடியோ காலில் தன் மனைவியுடன் ஆபாசமாக பேசிவந்ததும், அவரின் அந்தரங்க புகைப்படங்கள் தன் மனைவியின் செல்போனில் இருந்தது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். இதையடுத்து காவல்துறை தலைவரிடம் புகார் செய்ததும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்துவரும் அஸ்ரப் அன்சாரி, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நெல்வாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2012ஆம் ஆண்டு முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாகவே அன்சாரியின் மனைவி, நெல்வாய் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வருவதாக அடிக்கடி கணவனிடம் சொல்லிவிட்டு சென்று வந்திருக்கிறார். இதில் கணவன் அஸ்ரப் அன்சாரிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
உடனே அவர் மனைவியின் செல்போனை எடுத்து பரிசோதித்தபோது, வேறு ஒரு ஆணுடன் தன் மனைவி தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த அன்சாரி, தன் மனைவியுடன் வீடியோ காலில் ஆபாச அரைகுறை ஆடையுடன் அந்த நபர் ஆபாசமாக பேசி வருவதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து தன் மனைவியுடன் தொடர்பு இருக்கும் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.
மனைவியின் செல்போனில் உள்ள அந்த நபரின் அந்தரங்க புகைப்படங்களையும் வைத்து விசாரித்தத்ல் அவர் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் முனுசாமி என்பது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து தன் மனைவியின் செல்போனில் இருந்த முனுசாமியின் அந்தரங்க புகைப்படங்களை எல்லாம் ஆதாரமாக வைத்து தமிழக காவல்துறை தலைவர், வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர், காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இணையதளம் மூலமாக புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகார் அளித்ததை தொடர்ந்து திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனுசாமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த நிலையில், காவல் ஆய்வாளர் அரை நிர்வாணத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

