விளாத்திகுளம் உட்கோட்டத்தில் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவலார்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது – 45 மூட்டைகளில் 2250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதூர் சிவலார்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. காவலர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி அந்தப் பகுதிகளில் வாகனத் தணிக்கை செய்தபோது அந்த வழியாக வந்த TN 21AW 5844என்ற Pickup வேனை சோதனை செய்தபோது அதில் சுமார் 50கிலோ எடையுள்ள 45 மூட்டை 2250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் வாகனத்தை ஓட்டிவந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அமிர்தராஜ் மகன் யோகராஜ் (20) மற்றும் அதே அருப்புக்கோட்டையை சேர்ந்த பரமசிவம் (42), சந்தோஷ்குமார் (19) ஆகியோர் கடத்தியது தெரியவந்தது. மேலும் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரையும், அதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு வந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

