• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம்

policeseithitv by policeseithitv
October 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதன்படி பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று வருகிறது.
தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும். இதில் சாதாரண படகு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50-ம், வரிசையில் நிற்காமல் நேரடியாக செல்வதற்கு கட்டணமாக ரூ.200-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படகு போக்குவரத்துக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இல்லாததால், வெளிமாவட்டங்களில் இருந்து தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை நேற்று முதல் அறிமுகம் செய்தது. இதற்காக https://tamilshiponlineticket.com/என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் ஆன்லைன் முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Previous Post

காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Post

தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 143வது ஆண்டுபிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Next Post
தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 143வது ஆண்டுபிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 143வது ஆண்டுபிறந்த நாள் விழா கொண்டாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In