உலக முதியோர் தின விழா
நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உலக முதியோர் தின விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
உலக முதியோர் தின விழாவை முன்னிட்டு ஒளவை கிராம நல சங்கம் சார்பாக அனுபவம் – முதியோர் இல்லம் கடந்த 20 ஆண்டு காலமாக ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. இந்த முதியோர் இல்லத்தின் மூலம் 40 முதியோர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், இம்முதியோர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும், முதியோர் இல்லத்தில் பழுதடைந்துள்ள அறைகளை பழுது நீக்கம் செய்து தருமாறும் உரிய அலுவலருக்கு அறிவுறுத்தினார். இம் முதியோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நினைவு திறன்போட்டி, கோலபோட்டி, பாட்டுப்போட்டி, நீர்நிரப்பும்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அப்போட்டியில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், ஒளவை நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ஹெல்ப்ஏஜ் மருத்துவர் காட்வின், ரோட்டரி விங்ஸ் செயலாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி தொகுப்பு:
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

