தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் வட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வரும் நவம்பர் 13,14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை புறக்கணிப்பது, கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியை அரசாணைப்படி வரன்முறைப்படுத்திட வேண்டும், சட்டமன்ற தேர்தல் நடத்தியதற்கான நிதியினை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

