சென்னை27ம்தேதி ஆழ்வார்பேட்டை பகுதியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பவர் திடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் லலிதா¸ சிறப்பு உதவி ஆய்வாளர் .ரமேஷ் பாபு¸ காவலர்கள் கோபிநாத் ராஐசேகர் .முனுசாமி மற்றும் கார்த்திக் ஆகியோர் உடனடியாக அந்த நபரின் மீது தண்ணீர் ஊற்றி தீக்குளிப்பதை தடுத்து அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பணியின் போது விழிப்புடன் இருந்து சமயோஜிதமாக செயல்பட்டு தீக்குளித்தவர் மீது உடனடியாக ஒரு முழு கேன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அந்த நபரை காப்பாற்றியமைக்காக மேற்கண்ட காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் C.சைலேந்திர பாபு.¸ இ.கா.ப நேரில் அழைத்து பாராட்டியதோடு பண வெகுமதியும் வழங்கினார்.

