வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த போது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வேதாரண்யம் மீனவர்கள் கடந்த (செப்.25) தேதியிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், செப்.27-ல் நேற்று வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சின்னதம்பி, சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் செப்.23ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர், மீனவர்களின் படகை சூழ்ந்துகொண்டு தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கியுள்ளன். சிவகுமார் என்ற மீனவரை தலையில் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். மேலும், சின்னதம்பி, சிவா ஆகிய இரண்டு மீனவர்களை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசு மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் காலம் தாழ்த்தாமல் மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டக் களத்தில் குதித்தனர்

கோட்டாட்சியரிடம் மனு அளித்த மீனவர்கள் இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நிகழாமல் பாதுகாக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர் வேதாரண்யத்தில் மீனவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக உள்ளது இந்த விஷயத்தில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் மெத்தன போக்கை கைவிட வேண்டுமென மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

