சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் அவர்களுக்கு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் திருத்தங்களில் வெகு சிறப்பான பாராட்டுவிழா!!
—————–
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அரசர் அசோகன் அவர்களுக்கு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று திருத்தங்கல் கனி மஹாலில் வைத்து
மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது
சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் அவர்கள் முன்பு சிவகாசி நகராட்சி துணைத்தலைவராக பதவி வகித்த காலத்தில் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றுவந்த அரசர் அசோகன் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சிவகாசி தொகுதியில் களமிறக்கப்பட்டார் சிவகாசியில் நகர்மன்ற துணைத் தலைவராக இருந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அசோகன் அவர்கள் சிவகாசி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் சிவகாசி தொகுதி முழுவதும் முழுமையான வளர்ச்சி பெறும் என மக்கள் முடிவு செய்தனர்
இந்த நிலையில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் அசோகன் அவர்கள் களமிறக்கப்பட்ட உடன் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்
மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த அசோகன் அவர்கள் வெற்றிக்காக காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பொதுமக்கள் என பல தரப்பினரும் தேர்தல் பணிகளில் பம்பரமாக சுழன்று பணியாற்றினார் இதன் பலனாக அசோகன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இதனை கொண்டாடும் வகையிலும் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற 100 தினங்களில் சிவகாசி தொகுதி முழுவதும் மக்களின் குறைகளையும் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அசோகன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் பாராட்டு விழா எடுத்தனர்

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன்கோவில் பட்டி, மாரியம்மன் கோவில், பி.கே.எஸ்.ஆறுமுகம் நாடார் ரோடு உள்ளிட்ட பகுதியில்
உள்ள பொதுமக்கள் மற்றும் தொகுதி முழுவதும் பலரும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர். சிவகாசி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி மக்களிடம் பாராட்டு பெற்றுள்ளது போல் தற்போது சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பான திட்டங்களை சாதனையை நிகழ்த்தி வருகிறார் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் இவருக்கு பாராட்டு விழா வைக்கும் நிகழ்ச்சி சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீ ராஜா சொக்கர் (தலைவர்)
விருதுநகர் கிழக்கு மாவட்டம் ஜிவி கார்த்திக் துணைத் (தலைவர்) ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்ச்சியில்
திமுக நகர பொறுப்பாளர் உதயசூரியன், நகர மதிமுக செயலாளர்
சீனிவாசன், சிபிஐ நகரச் செயலாளர் சுரேஷ்குமார், சிபிஐ( எம்) நகர பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலாளர் ஈஸ்வர பாண்டியன் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் மனிதநேயன்
ஆகியோர் இந்த சிறப்பான பாராட்டு விழாவில் முன்னிலை வகித்தனர்
இந்த நிகழ்ச்சிக்கு
திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை தலைவர் எம் எஸ் பாக்கியம் , செயலாளர் தங்கரத்தினம், பொருளாளர் பாலகுருசாமி, ஐம்பெரும் பள்ளிகளின் தாளாளர் மாணிக்கம் மற்றும் திருத்தங்கல் எட்டு சமுதாய உறவுமுறை செயலாளர் கருப்பசாமி பொருளாளர் ஓய்வுபெற்ற கிராம அதிகாரி பூமிநாதன் மற்றும் சுவாமி விவேகானந்தர் வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் தமிழரசன், செயலாளர் ஏ பி முருகவேல், பொருளாளர் ராகுலன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மேல திருத்தங்கள் பாண்டியன் நகர் நாடார் உறவின்முறை தலைவர் இசக்கி ராஜ், செயலாளர் குருசாமி, பொருளாளர் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்
இந்த நிகழ்ச்சி கூட்ட ஏற்பாடு நகர காங்கிரஸ் கமிட்டி திருத்தங்கல் தலைவர் மாரீஸ்வரன் சிறப்பாக செய்திருந்தார் அதுபோல் விநாயகம் ரியல் எஸ்டேட் திருத்தங்கல் எம் முருகேசன் கூட்ட ஒருங்கிணைப்பு சிறப்பாக செய்திருந்தார்
சிவகாசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அரசர் அசோகன் அவர்களுக்கு காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் வர்த்தகர்கள் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் இந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்று சிறப்பு செய்தனர் செய்தி தொகுப்பு விருதுநகர் மாவட்ட செய்தியாளர் எம் மாரிமுத்து புகைப்படக் கலைஞர் பாக்கியராஜ்

