
144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் அனுமதியின்றி சேர்வைக்காரன் மடம் டாஸ்மாக் கடையை மூட இன்று போராட்டம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெறும் போராட்டத்தை அனுமதிக்க இனிமேல் அனுமதிக்க மாட்டோம் என வழக்கறிஞர் தலைமையில் ஊர் மக்கள் இளைஞர்கள் ஓன்றிணைந்து மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் முறையிட முடிவு
மாவட்ட நிர்வாகம், காவல்துறை இதற்கு தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை !!
———————————-
தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை விதிமுறைக்கு புறம்பாக உள்ளது எனவும் இதனால் மதுபானக்கடையை அகற்ற கோரி இந்த பஞ்சாயத்து துணை தலைவியின் கணவர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து உள்ளாராம்.
அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கடை செயல்படுகிறதா? அல்லது விதி முறைகள் மீறி செயல்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், கலால் துறை, வருவாய் துறை ஆகியவை அரசு விதிமுறைப்படி டாஸ்மாக் கடை இயங்குகிறதா அல்லது கடை அருகே ஆலயம், பள்ளிகூடம் ஆகியவை அரசு தெரிவித்தபடி உள்ள இடைவேளியில் உள்ளதா? அல்லது மீறப்பட்டதா என அறிக்கை தயார் செய்து நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு தரப்பினர் கடையை மூட வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்துவதும் அதற்கு போட்டியாக பொது மக்களுக்கு எந்த இடையுறுகளும் இல்லாத அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு செயல்படும் டாஸ்மாக் கடையை ஏன் மூட வேண்டும் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெறும் போராட்டம் எனவும் கூறி வருகின்றனர்

வழக்கறிஞர் இருதயராஜ்
அரசு விதி முறைகள் மீறபட்டால் தாராளமாக அந்த டாஸ்மாக் கடை மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியாக போராட்டம் நடத்துகிறார்கள் எனவும் இது உள் நோக்கத்தோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் பலர் டாஸ்மாக் மூட கூடாது என போராடுவதும் தொடர்ந்து வந்த நிலையில்
மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து
மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி இன்று (22ம் தேதி) காலை 11மணிக்கு மதுபானக்கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த 100 க்கு மேற்பட்டவர்களை திரட்டியதாக கூறப்படுகிறது இந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டதால் 15 பேர் மட்டும் ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகிறது
ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், இ.கம்யூ, கட்சியின் ஒன்றிய செயலாளருமான ஞானசேகர் தங்கம்மாள்புரம் சமூகஆர்வலர் ஜெபஸ்டின் முன்னிலை வகிக்கிறார். என செய்தி குறிப்பு வெளியாகின. இது தவறான போக்கு மாவட்ட நிர்வாகம்,
கலால் துறை ஆகியோர் இந்த கடை விஷயமாக முழுமையாக விசாரணை செய்து அறிக்கை தயார் செய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் மதிப்பு அளிக்காமல்
144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் அனுமதியின்றி சேர்வைக்காரன் மடம் டாஸ்மாக் கடையை மூட இன்று 22/07/2020 போராட்டம் நடத்தியதற்கு பதில் அடியாக ஊர் மக்கள் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளிக்க உள்ளதாகவும். கூறப்படுகிறது.144 தடை காலகட்டத்தில் ஆர்ப்பாட்டம் போராட்டம் என பொது மக்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தும் வகையில் செயல்படுவதை வழக்கறிஞர் இருதயராஜ் தலைமையில் தலைமையில் ஊர் மக்கள் இளைஞர்கள் மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் முறையிட முடிவு செய்துள்ளனர் இதனால் சேர்வைக்காரன் மடம் கிராமத்தில் பரபரப்பு காணப்படுகிறது.

