தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தாமாக முன்வந்து முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 22 இலட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது.
பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கூட்டமாக கூடுவது, முகக்கவசங்களை முறையாக அணியாதது போன்ற காரணங்களால் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கிறது.
காய்ச்சல் வந்ததும் உடனடியாக காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

