குற்றங்களை தடுக்க விரைந்து குற்றங்களை கண்டுபிடிக்க வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களின் அடையாள அட்டை விவரங்களை சரியான முறையில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும்
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், நடக்கக்கூடிய குற்றங்களை விரைவில் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டும் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார். அதாவது கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் எடுத்துக்காட்டாக கொலை, கொள்ளை, கஞ்சா & குட்கா விற்பனை செய்தல் ஆகிய குற்ற செயல்களில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, குற்றங்களைத் தடுக்கும் பொருட்டும், குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கூறியதாவது தனியார் நிறுவனங்களில் பணிபுரிய வரும் வடமாநில தொழிலாளிகளின் அடையாள அட்டைகளை வாங்கி சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், வட மாநிலத் தொழிலாளர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்.
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.

