தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்காக ரூ.58.21 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராம மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பாக, 8வது படிக்கும் 200 அரசு பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவியாக டேப் (TAB) வாங்குவதற்கு ரூ.35 லட்சத்தை நன்கொடையாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீயிடம் வங்கியின் பொது மேலாளர் சூரியராஜ்அளித்தார்.

மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதியதாக ஜென்செட் வாங்குவதற்கு முதல்வர் நேருவிடம் ரூ.23.21 லட்சத்தை நன்கொடைக்கான வரைவோலையை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் சுந்தரேஷ் குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் உடன் இருந்தனர்

