நல்லாசிரியருக்குப் பாராட்டு விழா வேதாரண்யம் சி.க .அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக 36 ஆண்டுகாலமாகதொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும் ஆசிரியர் நாகராஜன் இவ்வாண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியரைப் பாராட்டும் பொருட்டு பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், கோடிக்கரை கோடியக்காடு கிராமவாசிகள், முன்னாள் இன்னாள் கோடிக்கரை வீரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வீரா திருக்குறள் பேரவை ,மழைத்துளி நற்பணி மன்றம் ஆகியவற்றின் சார்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ் அன்பழகன் தலைமை வகித்தார். ஆசிரியர் தியாகராஜன் வரவேற்புரையாற்றினார்.
ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆசிரியரைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் தென்னரசு வளர்ச்சிக் குழு துணைத்தலைவர் மா.மீ. புகழேந்தி செயற்குழு உறுப்பினர்கள் அம்பாள் குணசேகரன் வேதநாயகம் புயல் குமார் வைரம் ஜெயச்சந்திரன் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் வேதாரணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே வேதரத்தினம் நகரச் செயலாளர் மா.மீ. புகழேந்தி ஒன்றிய செயலாளர் சிவானந்தம் கலந்துகொண்டு ஆசிரியரைப்பாராட்டினர்.
பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் நகரப் பிரமுகர்கள் ஆசிரியரை வாழ்த்திப் பேசினர்.
ஆசிரியர் நாகராஜன் தனக்கு வழங்கிய நல்லாசிரியர் விருதுக்கான தொகை ரூபாய் 10 ஆயிரத்தை தான் பணியாற்றும் வேதாரணியம் சி.க. அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு வழங்கினார்.
மேலும் ரூபாய் 10 ஆயிரத்தை தனது நிதியாக தான் பயின்ற கோடிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கினார்கற்பித்தல் பணி மற்றும் பள்ளி தொடர்பான அனைத்து பணிகளையும் சிறப்பாக
நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஆதவன் தொகுத்து வழங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

