• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
September 14, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (14.09.2021) மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது கணினி வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாகும். தற்போது கணினி வழி செயல்பாடுகள் சூப்பர் மார்க்கெட் முதல் அனைத்து இடங்களிலும், நிறுவனங்களிலும் அவசியமான ஒன்றாக உள்ளது. தற்போது வீட்டில் இருந்து கொண்டே செல்போன் அல்லது கணினி மூலம் ஆன்லைனில் பணபரிமாற்றம் செய்வது முதல் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். இது அறிவியல் வளர்ச்சி என்றாலும் அதில் நமக்கே தெரியாமல் நாம் கவனிக்காமல் கணினி வழி குற்றங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அதனை பற்றிய அறிவும் விழிப்புணர்வும் கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதே போன்று ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வங்கியில் இருந்து வங்கி அதிகாரி பேசுவது போன்று யாரேனும் தொடர்பு கொண்டு உங்கள் வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை கேட்டால் எந்த விபரங்களையும் கொடுக்க வேண்டாம். பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எப்பொழுதும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் தலைமையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன், உதவி ஆய்வாளர் திரு. சுதாகரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி முதல்வர் திரு. நாகராஜன், வரலாற்று துறை தலைவர் முனைவர் திரு. தேவராஜ், வணிகவியல் துறை தலைவர் முனைவர் திருமதி. பொன்னுதாய், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார், தென்பாக தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. மாரிக்குமார் மற்றும் காவல்துறையினர் கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்

 

Previous Post

குளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி 2-ம் பரிசு மற்றும் கோப்பை வென்றது.

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் தெரிவித்துள்ளார்.

Next Post
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் தெரிவித்துள்ளார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In