நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (13.09.2021) வடக்கு பொய்கைநல்லூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெடங்கிவைத்தார்.

குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 13.09.2021 முதல் 27.09.2021 வரை நடைபெற உள்ளது. 13.09.2021 -18.09.2021 வரை முதல் சுற்றும், 20.09.2021 – 25.09.2021 வரை இரண்டாவது சுற்றும், 27.09.2021 அன்று விடுபட்டவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
1 முதல் 2 வயதுடையவர்களுக்கு அல்பெண்டாசோல் ½ மாத்திரை (200அப), 2 முதல் 19 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயதுடைய மகளிருக்கு அல்பெண்டாசோல் 1 மாத்திரை (400அப) வழங்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில் 01 முதல் 19 வயதுடைய 1,99,951 குழந்ழைதகளுக்கு, 20 முதல் 30 வயதுடைய 41,899 மகளிருக்கும் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடங்களில் கோவிட்-19 தடுப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.விஜயகுமார், மாவட்ட பயிற்ச்சி மருத்துவ அலுவலர் மரு.திருமுருகன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.மு.முருகானந்தம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.