கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் தடை செய்த இயந்திர பயன்பாடு தாராளமாக பயன்பாட்டில் உள்ளது.
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு அருகே இவ்வூராட்சி உள்ளது. மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சியில் வருவாய்க்கு பஞ்சமில்லை. செல்வந்தர்கள் இங்கு அரசு தரிசு நிலம் ஆக்கிரமிப்பு, விவசாய நிலங்களை விதி மீறிபிளாட்களாக பயன்படுத்தும் சர்ச்சையும் உள்ளது.மேலும் பொக்லைன், மண் அள்ளும் இயந்திரம், பாறை தகர்ப்பு, நிலச்சீரமைப்பு என்ற பெயரில் சரிவான பகுதியில்மண்சரிவிற்கு வித்திடும் பணிகள் நடக்கின்றன.
மலைத்தள பாதுகாப்புபடி மேற்கண்ட இயந்திரங்களை இங்கு பயன்படுத்த தடை உள்ளது.விவசாய பயன்பாடு எனில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் மேற்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் விதிமீறி நள்ளிரவில் மேற்கண்ட பணிகள் நடக்கின்றன. கண்காணிக்க வேண்டிய வருவாய் மற்றும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. அனுமதியற்ற கட்டுமான பணிகளும் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
