புதிய நடமாடும் கொரோனா நோய்த்தடுப்பு மருந்துதுறை சார்பில் புதிய நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் – ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் புதிய நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள இதுவரை நிலவி வந்த தடுப்பூசி பற்றாக்குறை தீர்ந்து மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் உடனுக்குடன் கிடைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது நம்மாவட்டத்தில் 6 வட்டாரங்கள், 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 5 மருத்துவமனைகள், மற்றும கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்
மற்றும் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது புதிய அறிமுகமாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தோர்கள், நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர இயலாதவர்கள், தொடர் வியாபாரத்தால் வணிக வளாகத்தை விட்டு தடுப்பூசி முகாம்களுக்கு செல்ல முடியாதவர்களுக்காக நடமாடும் தடுப்பூசி மருத்துவக் குழு அமைந்த கொரோனா தடுப்பூசி
வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் நேற்று (06.09.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் வீடு தேடி இதுவரை முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு அவர்களின் இல்லத்திலோ அல்லது வணிக வளாகத்திலோ தடுப்பூசி போடுவதற்கு இந்த நடமாடும் வாகனத்தை பொது சுகாதார துறையின் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் 100மூ தடுப்பூசி இலக்கை அடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 16.01.2021 முதல் இதுவரை முதல் தவணையாக 2,66,460 நபருக்கும், இரண்டாவது தவணையாக 63,300 நபருக்கும் மொத்தம் 3,29,760 நபருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள்,
கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தோர்கள், நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர இயலாதவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர்க்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. மேலும் இந்த நடமாடும் தடுப்பூசி வாகனம் 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு நடைபெறும் தீவிர தடுப்பூசி முகாம்களில் வருவாய், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை மற்றும் அனைத்து துறை சார்ந்த ஊழியர்களும் சுய உதவிக்குழு, வணிகசங்கங்கள், மற்றும் அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் இணைந்து நமது மாவட்ட மக்களை கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் பாதிக்காத அளவில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திட உதவிடுமாறு தெரிவித்து, நடமாடும் தடுப்பூசி வாகனத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் பார்வையிட்டார்.
கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை கொடியசைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
டாக்டர்.பி.விஜயகுமார், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் திரு.ந.திருமுருகன், மருத்துவர்.பிரீத்தி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

