கப்பலோட்டிய தமிழன் வ உ சி 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியின் பிரதான சாலையை வ உ சி சாலை என பெயர் மாற்றம் செய்த தமிழக முதல்வர் , எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோருக்கு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் எட்வின் பாண்டியன் நன்றி தெரிவித்தார்
____
கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் பெயருக்கு சொந்தக்காரரான வ உ சி சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது இந்த பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள வஉ சி யின் திருவுருவச் சிலைக்கு 24வது வார்டு பொதுமக்கள் சார்பில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவரும் முன்னால் மாமன்ற உறுப்பினருமான எட்வின் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சசிக்குமார், லூர்த்துசாமி, சகாயராஜ், கல்யாணசுந்தரம்,
அமலநாதன் தீபக்,
மனோகரன், அண்டோ, கார்த்திக், சங்கர், ஆனந்த் பாண்டியன்,வளன்,
ஆன்ட்ரூஸ்,அரவிந்த், ஜெனிஸ்டன், வருசை முகமது, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பின்னர் கப்பலோட்டிய தமிழன் வ உ சி 150வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பிரதான சாலையான மேல காட்டன் சாலையை வஉசி சாலை என பெயர் மாற்றிய தமிழக முதல்வர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து இருப்பதாக எட்வின் பாண்டியன் தெரிவித்தார்

