ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை நேற்று தொடங்கி உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறன்றன. ஆனால் திருச்சியில் இருந்து இலங்கைக்கு நீண்ட நாட்களாக விமான சேவை இயக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை தொடங்கி உள்ளது. வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் இந்த விமானம் இயக்கப்படுகிறது.

