வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் புள்ளி மான், வெளிமான், குதிரை, காட்டு பன்றி, முயல் உட்பட பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள பறவைகள் சரணலாயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பறவை இனங்கள் இங்கு மார்ச் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் வந்து தங்கி செல்லும்.
இந்த சரணாலயம் கொரோனா தொற்று காரணமாக அரசின் உத்தரவிற்கு இணங்க மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இன்று 1-09-2021 முதல் வனஉயிரின சரணாலயம் திறக்கப்பட்டது. இது குறித்து வனச்சரக அலுவலா் அயூப்கான் அவா்கள் தெரிவித்ததாவது
இந்த சரணாலயத்தை சுற்றி பார்க்க வருகை தரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். முககவசம் அணியாத சுற்றுலா பயணிகளுக்கு சரணாலயத்திற்குள் அனுமதி இல்லை
சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதித்து பின்னரே அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்றுகள் பரவாமல் இருக்க கிருமி நாசினி பயன்படுத்தி உள்ளே அனுமதிக்கபடுவார்கள். சுற்றுலா பயணிகள் தாங்கள் அணியும் முக கவசங்களை சாலை ஓரங்களிலோ சரணாலயப்பகுதிகளிலோ வீசி எறிய கூடாது அவரவர் முழு கவனத்துடன் சுற்றி பார்த்து வர
அரசு அனுமதித்த சட்டதிட்டங்கள் விதிமுறையை கடைபிடித்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனசரக அலுவலா் அயூப்கான் தெரிவித்தார்.

