சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.
லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக அடித்து ரத்தம் சொட்ட சொட்ட துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை உயர்நீதி மன்றம் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவில்பட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இந்த நிலையில் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,
முருகன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
. இந்த நிலையில் வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு நேற்று நாளிரவு சிறையில் அடைக்கப்பட்டார் . காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமை காவலர் முருகன் ஆகியோர் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமை காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் முதன்மை நீதித்துறை நடுவர் ஹேமா
முன்னிலையில் 3 பேரையும் ஆஜர்படுத்தினர் முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து செய்த பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர் நீதிபதி ஹேமா 3 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார் 15 நாள் நீதிமன்ற காவலில் எடுத்தனர் இவர்களை தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையாக பேரூரணி சிறைச்சாலைக்கு சிறையில் அடைக்க கொண்டு சென்றனர் காவல் நிலையத்தில் சம்பவம் நடந்த அன்று பணியிலிருந்த காவல் நிலைய பாரா என அழைக்கப்படும் காவல் நிலைய பொறுப்பு காவலர் ரேவதி ஏற்கனவே நீதிமன்றத்தில் அப்ரூவராக அரசு சாட்சியாக சாட்சி அளித்துள்ள நிலையில் மேலும் இரண்டு காவலர்கள் அப்ரூவராக மாற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுசிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வருகின்றனர் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுகைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 16 7 2020 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையாக பேரூரணி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
செய்தித்தொகுப்பு எம் ஆத்திமுத்து
