தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது – 109 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல்.
விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களின் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் நேற்று (30.08.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சுப்பிரமணியபுரம் பகுதியில், விளாத்திகுளம் லெக்கம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் தனுஷ் (19) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக தனது நான்கு சக்கர வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி தனுஷ் என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.

