நாசரேத் சேகர நிர்வாகிகள் தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் தேர்தலை ரத்து செய்து ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ் சனிக்கிழமையன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான தேர்தல்கால அட்டவணைப்படி முதல் கட்டமாக ஆக. 16 ஆம் தேதி சபை மன்ற பிரதிநிதிகள், திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதன் இறுதிக் கட்டமாக சேகரக்கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்வ தற்கான கூட்டம் இன்று ஆக 28 ஆம்தேதி நடைபெறுவதாக இருந்தது.
நாசரேத் சேகரத்தில் சேகர நிர்வாகிகள் தேர்தலை முன்னிட்டு நாசரேத் தூய யோவான் பேராலயமான கதீட்ரலில் தலைமைப் பாதிரியார் அண்ட்ரூ விக்டர் ஞான ஒளி காலை 7மணிக்கு பரிசுத்த நற்கருணை ஆராதனையை நடத்தினார். ஆராதனை நிறைவடைந்ததும் சேகரமன்ற கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
அதற்குள் சேகர மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை தவிர எஸ்.டி.கே.அணியைச் சேர்ந்த 10 பேர் களுக்கு நாமினேசன் கொடுத்துள்ளதாக கூறி அவர்களும் ஆலயத்திற்குள் வர முற்பட்டபோது டி.எஸ்.எப்.அணியைச் சார்ந்தவர்கள் இரண்டாம்கட்ட தேர்தலான சுயநிதி கல்லூரி, பள்ளிகளில் இருந்து சேகர பிரதிநிதிகளை தேர்வுசெய்வதற்கான இரண்டாம் கட்ட தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் சேகரகுருவால் நாமினே சன் செய்யப்பட்டவர்களை வாக்கு அளிக்க அனுமதிக்ககூடாது அல்லது இரண்டாம் கட்ட தேர்தலை நடத்தி இவர்களை வாக்களிக்க விடலாம் இல்லாவிட்டால் வெற்றி பெற்ற 27 உறுப்பினர்களை வைத்து தேர்தலைநடத்தலாம் என்றுகூறியதால் இரண்டு தரப்பினரிடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் ஒருவிதமான பதட்டமான மூழ்நிலை நிலவியது.
மேலும் இரண்டு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்படுவதாக இருந்தது. அதற்குள் தேர்தல்பாதுகாப்புபணிக்குவந்திருந்த சாத்தான்குளம் டி.எஸ்.பி. கண்ணன் தலைமையிலான ஆய்வாளர்கள் நாசரேத் விஜயலெட்சுமி, சாத்தான்குளம் பாஸ்கர் உதவி ஆய்வாளர்கள் நாசரேத் தங்கேஸ்வரன், செல்வின்ராஜ் மற்றும் காவலர்கள் விரைந்து இரண்டு தரப்பினரையும் அகற்றி விட்டனர்.இதனால் கூச்சல் குழப்பம் ஏற் பட்டது.அதனால் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் சம்பவஇடத்திற்கு ஏரல் வட்டாட்சியர் இசக்கி ராஜ் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் மண்டல துணைதாசில்தார் பொன்னுலட்சுமி,சாத்தான்குளம் டி.எஸ்.பி.கண்ணன், ஆய்வாளர்கள் விஜயலட்சுமி,பாஸ்கர்,வருவாய் ஆய்வாளர் முத்துராமன்,கிராம நிர்வாக அதிகாரிகள் நாசரேத் முத்துராமன்,உடையார்குளம் சரவணன்,கச்சனாவிளை வைகுண்டன்,தேமான் குளம் சுரே~;,வட்டாட்சியரின் உதவியாளர் கர்ணமகாராஜா, கிராம உதவியாளர்கள் திரவியம், கண்ணன் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசினார்.அதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக நாசரேத் சேகர மன்ற தேர் தலை ஒத்தி வைப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார். இரண்டு தரப்பினரும் மேல் முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் அதுவரையிலும் இன்று ஆக.28 ஆம் தேதி நடைபெற இருந்த நாசரேத் சேகரமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வட்டாட்சியர் தெரிவித்தார். அதன்பின்னர் கூடியிருந்த கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

