• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம் – எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை

policeseithitv by policeseithitv
August 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம் – எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் இன்று ரோச் பூங்காவில் நடைபெற்ற காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் என அறிவுரை.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகரம், ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திக்குளம், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ஆகிய உட்கோட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அந்தந்த உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் உட்கோட்ட தலைமையிடங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் இன்று காவல்துறையினருக்கு அந்தந்த உட்கோட்ட தலைமையிடங்களில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது பொதுமக்கள் அனைவரும் நல்லவர்கள், அதில் யாராவது ஒரு சிலர் மட்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள், இவர்களை மனதில் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது, பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து ஒழுக்கமாக இருக்க வேண்டும், சட்டத்தை கடைபிடிப்பதிலும், அரசு விதிமுறைகளை கடைபிடிப்பதிலும் நாம் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாம் பொதுமக்களில் ஒருவராக இருந்து, அவர்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து செயல்படவேண்டும், பொதுமக்களுக்கு நம்மால் இயன்ற வரையில் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு உதவிகள் செய்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற வேண்டும், உங்களுக்கு பணியில் உள்ள சிரமங்கள் மற்றும் குறைகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவியுங்கள், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், அதே சமயம் தவறு செய்தால் கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்று அறிவுரை வழங்கினார்.

இப்பயிற்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் மற்றும் குற்றப்பிரிவு ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துiயினர் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பாளையங்கோட்டையில் வாக்குவாதம் முற்றி வாலிபர் வெட்டி கொலை – தப்பி ஓடிய குற்றவாளிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்தது நெல்லை மாநகர போலீஸ்

Next Post

காபூல் விமான நிலையத்தில் நேற்று இரவு இரட்டை குண்டுவெடிப்பு – 13 அமெரிக்க வீரர்கள், 60 ஆப்கானியர்கள் பலி

Next Post
காபூல் விமான நிலையத்தில் நேற்று இரவு இரட்டை குண்டுவெடிப்பு – 13 அமெரிக்க வீரர்கள்,  60 ஆப்கானியர்கள் பலி

காபூல் விமான நிலையத்தில் நேற்று இரவு இரட்டை குண்டுவெடிப்பு - 13 அமெரிக்க வீரர்கள், 60 ஆப்கானியர்கள் பலி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In