சென்னையில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ,கா. விசுவநாதன் இ.கா.ப., அவர்கள்,
28.06.2020 ம் தேதி 11:50 மணிக்கு வண்ணாரப்பேட்டை மின்ட் சந்திப்பில், முழுஊரடங்கு சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமீறல் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஆகியவை குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.
மேலும் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
உடன், வடக்கு மண்டல இணை ஆணையாளர்,திரு. கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப., வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி. G. சுப்புலட்சுமி , மற்றும் பூக்கடை துணை ஆணையாளர் திரு. S. இராஜேந்திரன் , இ.கா.ப., ஆகியோர் இருந்தனர்.
செய்தி தொகுப்பு
ஆர்.ஆனந்தபாபு, எம்.ஆர்.ஜெயபால்

