அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மாவட்ட தலைவர் விஜயகுமார் நாடார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் ஆகிய சங்கம் சார்பாக செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற ஊரில் வியாபாரம் செய்து வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரையும் தாமதமாக கடை அடைத்த காரணத்திற்காக கைது செய்த காவல்துறையினர் அவர்களின் உடலின் முக்கிய பகுதிகளில் கொலைவெறி தாக்குதல் நடத்தி துன்புறுத்தி ஆசனவாயில் லத்தி கம்பை வைத்து இருவரையும் சாகும்வரையில் அடித்துக் கொன்று காவல்துறை தனது வெறியை தீர்த்து கொண்டார்கள் இது அரசுக்கும் பொதுமக்களுக்கும் தெரிந்த உண்மையே ஆகவே அகில இந்திய நாடார் மக்கள் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட தலைவராக வன்மையாக இச்சம்பவத்தை கண்டிக்கிறேன் என்றும் மேலும் இந்த கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறை அதனை சார்ந்த சிறைத் துறையையும் உடந்தையாகச் செயல்பட்ட மருத்துவத்துறையும் அரசின் விசாரணைக்கு உட்படுத்தி தவறு செய்த கொலைகாரர்களுக்கு உயர்ந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் இது போன்ற சமூக விரோத துயர செயல்களை இனியும் நடக்காத வண்ணம் அரசு உறுதி அளித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணமும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அகில இந்திய நாடார் மக்கள் பேரவை சார்பாகவும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் ஐக்கிய சங்கம் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

