நாசரேத் பகுதியில் உள்ள கிராமங்களில் புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய புதுவாழ்வுச் சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக்கன்றுகளை ஆக.15 ஆம்தேதி 2021 முதல் துவங்கி 2022 ஆக.15 ஆம்தேதிக்குள் நடதிட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மணத்தி, கல்லாம்பாறை, புறையூர் கிராமங்களில் நிழல் தரும் மரக் கன்றுகள், கனிதரும் மரக்கன்றுகள் நடுதலை துவக்கி வைத்தார்.
புறையூர் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட வாய்க்கால் கரையோரம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதை தலைவர் செல்வக்குமார் தலைமையில், துணைத் தலைவர் மாடசாமி, ஊராட்சி எழுத்தர் மாரிராஜ், முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல் ஹரீப், இந்து முன்னணி பிரமுகர் ஓடை முருகேசன், இக்பால், ஊராட்சி மன்ற உதவியாளர் சேதுகனி, 1-வது வார்டு உறுப்பினர் லெட்சுமி ஆகியோர் முன்னிலையில் சகோ. மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.
தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்பட்ட கல்லாம்பாறையில் தங்கம், பெருமாள், மாரியப்பன், ராஜரத்தினம், லட்சுமணன், துரைராஜ், பட்டுராஜ், தங்கராஜ், ஆறுமுகம், பெருமாள் என்ற செல்லப்பா ஆகியோர் முன்னிலையில் கனிதரும் பழ வகை மரங்களை நடுதலை துவக்கி வைத்தார்.
மணத்தி கிராமத்தில் இராஜபதி ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்திரராஜன் தலைமையில் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மணத்தி ரவிக்குமார், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன்,சென்னை சாய் கபடிஅணியின் பயிற்சியாளர் ஜெயராஜ்,எட்வின் சாம்ராஜ் ஆகியோர் முன்னிலையில் சகோ.மோகன் சி. லாசரஸ் மரக்கன்றுகள் நடுதலை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் சாம்ராஜ், புது வாழ்வுச் சங்க பொறுப்பாளர் ஹெயின் வெஸ்லி ஜேம்ஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஓய்வு ரஞ்சன்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

