தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்டு 16-ல் தொடங்கி 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல முதற்கட்ட தேர்தல் இன்று ஆகஸ்டு 16 ஆம் தேதி நடைபெற்றது இதில் சபை பிரதிநிதிகள் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இரண்டாவது கட்டமாக ஆகஸ்டு 28 ஆம் தேதி சேகர மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சேகர செயலாளர், பொரு ளாளர் மற்றும் சபைமன்ற பிரதி நிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மூன்றாவது கட்டமாக செப் டம்பர் 18ஆம் தேதி சபை மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திருமண்டலத்திற்கு சபை மன்றத்திலிருந்து ஊழியர் பிரதிநிதிகள், மற்றும் நிலைவரக் குழுவிற்கான பிரதிநிதிகள் தேர்தல் நடக்கிறது. இறுதிக்கட்டமாக அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் திருமண்டல பெருமன்றம் கூடி அலுவலக பிரதிநிதிகளான உபதலைவர், குருத்துவச் செயலர்,லே செயலர் திருமண்டல பொருளாளர் மற்றும் திருமண்டல கல்வி நிலைவரக் குழு செயலர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது பல்வேறு ஆலயங்களில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையும் சில ஆலயங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தில் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெற்றது இந்த ஆலயத்தில் 4 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது அதுபோல் 1ஆம் கேட் அருகே உள்ள தூய பேட்ரிக் ஆலயத்தில் 6 மணி வரை தேர்தல் நடைபெற்ற நிலையில் 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டது இதுபோல் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஆலயங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இதில் டிஎஸ்எப் அணி மற்றும் எஸ் டி கே ராஜன் அணி ஆகிய இரண்டு அணிகள் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது நிலவரப்படி டிஎஸ்எப் அணி
கோவில்பட்டி குளத்தூர்உட்பட
பல இடங்களில் வெற்றி முகத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது முழுமையான வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் நள்ளிரவு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது அனைத்து ஆலயங்களிலும் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கைகள் நடைபெறும் என கூறப்படுகிறது இன்று நள்ளிரவுக்குள் எந்த அணி வெற்றி பெற்றுள்ளது என்பது தெரியவரும் இதனால் வேட்பாளர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடும் வகையில் தயார் நிலையில் இருந்து வருகிறார்கள்

