முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எதிரிகள் இருவர் கைது – உடனடியாக எதிரிகளை கைது செய்த போலீசாரை மாவட் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு நடராஜர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் தங்கபாண்டி (25) என்பவரும், அகரம் சுடலைகோவில் தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் இசக்கிபாண்டி (23) மற்றும் அகரம் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த முத்து மகன் பாலமணிகண்டன் (22) ஆகியோரும் நண்பர்கள்.
இவர்களுக்குள் ஒரு பெண்ணை காதலிப்பதில் தகராறு ஏற்பட்டு, இசக்கிபாண்டி மற்றும் பாலமணிகண்டன் ஆகிய இருவரும் சேரந்து கடந்த 14.08.2021 அன்று தங்கபாண்டியின் வீட்டிற்கு சென்று அவரிடம் அவதூறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த தங்கபாண்டி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
♻️இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு அவர்களிடம் எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், உதவி ஆய்வாளர் திரு. ஜெயராம சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் அடங்கிய போலீசார் இன்று (16.08.2021) மேற்படி எதிரிகளான இசக்கிபாண்டி மற்றும் பாலமணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி எதிரிகள் இரண்டு பேரையும் உடனடியா கைது செய்த காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு தலைமையிலான முறப்பநாடு காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

