பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் 75வது சுதந்திர தின விழா ஊராட்சி மன்ற தலைவர் கமலா தேவி தேசிய கொடியேற்றினார்
——
நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகாலமாக கொண்டாடப்பட்டது இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் 75ஆவது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி சீனிவாசன் தலைமை தாங்கினார் ஓட்டப்பிடாரம் துணைத் தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கமலாதேவி தேசிய கொடி ஏற்றினார் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் மாநில காப்பாளர் பாஞ்சை வி கோபால்சாமி கலந்துகொண்டார் மேலும் வீர சக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி வருவாய் ஆய்வாளர் ஒட்டப்பிடாரம் சுப்புலட்சுமி பாஞ்சாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மல்லூ கோமதி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யோகராஜ் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பெரும்பாலானோர் பங்கேற்றன.
செய்தி தொகுப்பு பாஞ்சை வி கோபால்சாமி

