தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் சகோ மோகன் சி லாசரஸ் இடம் ஆசி பெற்றார்.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தலுக்கு எஸ்.டி.கே. ராஜன் தலைமையில் ஒரு அணியும், டி.எஸ்.எப். தலைமையில் ஒரு அணியும் களம் காண்கின்றனர். இந்நிலையில், டி.எஸ்.எப். அணியில் லே செயலாளர் வேட்பாளராக போட்டியிடும் டி. கிப்ட்சன் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி லாசரஸை நேரில் சந்தித்து ஆசிபெற்று பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்வில் வட்டகோவில டி.கே.எம். ஜாண் சன், டி.எஸ்.எப். பிரேம் ஆகியோர் உடனிருந்தனர்.


