தூத்துக்குடியில் திரிபுரா இளைஞர்கள் திடீர் முற்றுகை சார் ஆட்சியர் விசாரணை!!சென்னை சில்க்ஸில் பரபரப்பு
தூத்துக்குடியில் “தி சென்னை சில்க்ஸ்” ஜவுளி கடையில் வேலைபார்த்து வரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஊழியர்களாக பணியாற்றிவருகிறார்கள் . இவர்கள் அணைவரும் திடீரென முற்றுகையிட்டதால் “தி சென்னை சில்க்ஸ்” ஜவுளி கடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி விஇ ரோட்டில் பிரபல “தி சென்னை சில்க்ஸ்” ஜவுளிக்கடை மற்றும் குமரன் நகைக் கடை இயங்கி வருகிறது. இங்கு திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 27பேர் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளனர் . இதுகுறித்து “தி சென்னை சில்க்ஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், அவர்கள் அனைவரும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் திடீர் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்திய பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் ஆட்டோக்கள் மூலம் மீண்டும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் கலோன், அவர்களுக்கு தகவல் தெரியவர இதுகுறித்து விசாரணை நடத்தினார். பின்னர் திரிபுார மாநிலத்தவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சென்னை சில்க்ஸ் நிர்வாகத்தினர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளி மாநில ஊழியர்கள் பலர் ரயில் மூலம் அந்த அந்த மாநிலத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பலர் அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர் இதுபோல் திரிபுரா இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்க படுவார்கள் என தெரியவருகிறது வெளிமாநில இளைஞர்கள் திடீர் முற்றுகை தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி தொகுப்பு தூத்துக்குடி அருண்

