தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விளாத்திகுளம் உட்கோட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ வைப்பார் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அங்கு விரைந்து சென்று ரேஷன் அரிசி 23 மூடை மற்றும் அரிசியை கடத்த முயன்ற புதியம்புத்தூரை சேர்ந்த முருகன் 48, போஸ் 53, பாலசுப்ரமணியன் 51,ஆகியோரை நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.*
சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபர்களை விரைவாக பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


