தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற மற்றும் சேகர் மன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது இதுகுறித்து நாசரேத் திருமண்டல பேராயர் தெரிவித்த தகவல் 15 8 2021 அன்று நடைபெற இருந்த இந்த தேர்தல் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில் திடீரென தேர்தல் திங்கட்கிழமை அதாவது 16/08/2021 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை 08/08/ 2021 அன்று ஞாயிறு ஆராதனையில் வாசித்து ஆலய ஆராதனை பதிவேட்டில் பதிவு செய்யும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த தேதி மாற்றம் கிறிஸ்தவ சபை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றால் சமூக இடைவேளை கடைபிடித்து அனைவரும் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் என்று கிறிஸ்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் அதே சமயத்தில் திங்கட்கிழமை ஆன மறுநாள் அனைத்து அலுவலகப் பணிகள் உள்ளிட்ட வேலை நாட்கள் என்பதால் கிறிஸ்தவர்கள் அனைவரும் வாக்களிக்க இயலாத ஒரு நிலை ஏற்படும் ஆகவே சனி ஞாயிறு போன்ற நாட்களில் தேர்தல் வைக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர் இதுகுறித்து நாசரேத் திருமண்டல கிறிஸ்தவர்கள் பலர் தேர்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை வைக்க வலியுறுத்தி மாடரேட்டர் மற்றும் பேராயர் இடம் வலியுறுத்த உள்ளதாகவும் அதற்கு முன்னோட்டமாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் இடம் இன்னும் சில தினங்களில் கிறிஸ்தவர்கள் பலர் முறையிட உள்ளதாகவும் பேசப்படுகிறது.


