தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக, பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலயத்தில் சேகர மன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் எம்.டி.இன்ஸ்டீன் முன்னிலையில் நடைபெற்றது.சேகர மன்றத்திற்கு போட்டியிடுகின்ற எடிசன் சாமுவேல், ஆடிட்டர் சாமுவேல்ராஜ், பிரபாகரன்பால், பாலசிங், ஐசன்பாபு, ஜோசப், குமாரமணி, ரூபன்மனோஜ், டெல்சிஜெபமணி, ஜெலினாரோஸ்லின், உட்பட 21 பேர் வேட்பு மனுவை சேகரத்தலைவரும், திருமண்டல குருத்துவ செயலருமான குருவானவர் மோசஸ்ஜெபராஜ்-இடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் லே செயலராக போட்டியிடுகின்ற டி .எஸ்.எப்.கிப்சன், முன்னாள் லே செயலரும் பொருளாளருமான மோகன், SDRபொன்சீலன், SDR.சாம், எட்வர்ட், கிருபாகரன்ஜோசப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


