• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து நசுக்கி அழித்தனர்.

policeseithitv by policeseithitv
August 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து நசுக்கி அழித்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
திருப்பதியில் அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து ரோடு ரோலரால் நசுக்கி அழித்தனர்.
திருப்பதி போக்குவரத்துக் காவல் துறை வளாகத்தில் புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலாநாயுடு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- “திருப்பதி ஆன்மிக நகரம் ஆகும். திருப்பதியில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. அதில் இருந்து வரும் புகையால் காற்று மாசுபடுகிறது. வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலி (ஹாரன்) மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது. பெரும்பாலான இரு சக்கர வாகனங்களில் உள்ள புகைப்போக்கி, ஒலிப்பான்கள் ஆகியவற்றை மாற்றியமைத்து அதிக சத்தம் எழுப்பி மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு செய்த வாகனங்கள் கண்டறியப்பட்டன.
அந்த வாகனங்களை மடக்கி அதன் புகைப்போக்கி, ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை, போக்குவரத்துக் காவல் அலுவலக வளாகத்தில் வரிசையாக அடுக்கி வைத்து சாலை போட பயன்படுத்தப்படும் ரோடு ரோலரால் நசுக்கி அழிக்கப்பட்டு வருகின்றன.
பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் இரு சக்கர வாகனங்களில் சாதாரணமாக சத்தம் எழுப்பக்கூடிய புகைப்போக்கி, ஒலிப்பான் ஆகியவற்றை பொருத்தியிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கைக்குழந்தைகளின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக சத்தம் அவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹாரனை அதிக சத்தத்தில் ஒலிக்க செய்து சாலையில் செல்லும் பொதுமக்கள், பக்தர்களை பயமுறுத்துகிறார்கள். 65 டெசிபலுக்குமேல் சத்தம் எழுப்பும் இருசக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டு புகைப் போக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பதியில் பல மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள் மற்றும் பிற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதிக சத்தம் எழுப்பாமல் செல்ல வேண்டும். அப்படி சென்றால் அனைவருக்கும் நல்லது.” இவ்வாறு அவர் கூறினார்.
Previous Post

ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகை கொள்ளை

Next Post

சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும் பொருத்தப்பட்டன – மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., திறந்து வைத்தார் 

Next Post
சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும் பொருத்தப்பட்டன – மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., திறந்து வைத்தார் 

சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும் பொருத்தப்பட்டன - மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., திறந்து வைத்தார் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In