தூத்துக்குடி அருகே ஆடு திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் சதீஷ் (36). இவர் தனது வீட்டின் பின்புறம் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மர்ம நபர், ஆடுகளை திருட முயன்றுள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்து சதீஷ், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் பாலமுருகன் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

