கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
கொரோனா இரண்டாம் அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் மூன்றாம் அலை செப்டம்பரில் வரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் படலாம் என்ற அச்சமும் பரவலாக உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்பேரில் மூன்றாம் அலையை தடுக்கின்ற வகையில் தூத்துக்குடியில் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலை எதிரில் சின்னத்துரை அன்கோ அருகில் வைத்து தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், மகளிர் வள மையம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைந்த சேவை மையம் நிர்வாகி செலின் ஜார்ஜ், பெண்கள் வளமைய மகளிர் நல அலுவலர் எஸ் வீரம்மாள், சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகாமில் சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் தொ. செல்வமெர்சிகொரோனா தடுப்பு உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி கொரோனாவை தடுப்பதற்காக சுத்தமாக கைகளை கழுவுவது பற்றிய செய்முறை விளக்கம் அளித்தார் இதில் சமூக நலத்துறை அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


