தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் பெருமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலுக்காக பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலய சபையைச் சேர்ந்த டி.எஸ்.எப்.கிப்சன் அணியினர் பெருமன்ற பதவிகளுக்காக இன்ஸ்டீன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். பொதுப்பிரிவிற்கு இன்ஸ்டீன், கிருபாகரன், ஜான் சாலமோன் மனோகர், ஜான் வாசக் ஆகியோரும் பெண்கள் பிரிவிற்கு பாக்கியராணி, வாலிபர் பிரிவிற்கு டேவிட் நோவா ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்களை சேகரத் தலைவரும், திருமண்டல குருத்துவ செயலருமான, குருவானவர் மோசஸ் ஜெபராஜ் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அணியின் தலைவர் இன்ஸ்டீன் கருத்து தெரிவிக்கையில் கிறிஸ்து காட்டிய வழியில் திருமண்டலம் எழுப்புதலை சந்திக்கவும், பேட்ரிக்ஸ் திருச்சபை சுவிசேஷ திருச்சபையாக மாற்றப்படும் என்றும், திருச்சபையில் ஆதரவற்ற நிலையில், உழைப்பதற்கு உடல்நிலை ஒத்துழைக்காமல் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் சபையார்களுக்கு சேகர நிதியில் இருந்து மாதா மாதம் நிதி உதவி வழங்கப்படும் எனவும், திருமண்டலத்தில் என்றும் இல்லாத முறையாக பல வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கிறது. இது திருமண்டலம் முழுவதும் உள்ள சபையார்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர் காலத்தில் இப்படிப்பட்ட நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, ஆறு சபைமன்றங்களிலும் உள்ள முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி திருமண்டலத்தை மீட்கும் முயற்சியாக டி.எஸ்.எப்.கிப்சன், தலைமையில் முன்னாள் லே செயலாளர் மற்றும் பொருளாளர் மோகன், எஸ்.டி.ஆர்., வட்டக் கோவில் ஜான்சன் ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
மேற்படி வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் முன்னாள் லே செயலர் மோகன், வட்டக்கோவில் ஜாண்சன், பிரபாகரன்பால், ஆடிட்டர் சாமுவேல், கிருபாகரன், பர்ணபாஸ் நியூமன், ஜெபராஜ், வாசக், ஜோசப், பாலசிங், எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.



