தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்செந்தூர் கிளை சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணிக்கு பயன்படும் வகையில் 100 இரும்பு தடுப்பு வேலிகளை(Barricades) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கப்பட்டது.
திருச்செந்தூரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக இன்று திருச்செந்தூர் மெயின் ஆர்ச் முன்பு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணிக்கு பயன்படும் வகையில் 100 இரும்பு தடுப்பு வேலிகளை (Barricades) திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கப்பட்டது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தி சீர் செய்வதற்கும் மற்றும் பாதுகாப்பு பணிக்கு பயன்படும் வகையிலும் 100 இரும்பு தடுப்பு வேலிகளை வழங்கிய தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்செந்தூர் கிளைக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நன்றியை தெரிவித்தார்.
மேலும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தற்போது குறைந்துள்ளது. எனினும் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இவை அனைத்தையும் நாம் கடைபிடித்து நாமே நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடி கூடுதல் பொது மேலாளர் நவநீதகிருஷ்ணன், திருச்செந்தூர் கிளை மேலாளர் திரு. சிவசங்கரன் மற்றும் வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின்போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பபாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞானசேகரன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, திருச்செந்தூர் குற்ற பிரிவு ஆய்வாளர் கனகபாய், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் . கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

