தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதைய பதவியில் இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய பிரமுகர்கள் ஓட்டுகளை செல்லாதவை என அறிவித்ததும் பின்பு அவர்கள் ஓட்டுகளை செல்லும் ஓட்டுகள் என்றும் அறிவித்தும் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கினர் என்று வாக்காளர்கள் குற்றசாட்டு சுமத்தி வருகிறார்களாம்.
நாசரேத் திருமண்டலம் முழுவதும் உள்ள 6 சபை மன்றங்களில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக நாசரேத் பேராலயத்தின் செயலாளர் மற்றும் பொருளாளரை ஏற்கனவே 20.06.2021ல் வெளியிட்ட வாக்காளர் பட்டியலிலும், 30.06.2021 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்டியில் பெயர் இருந்தும் தற்போது அவர்களை காத்திருப்போர் பட்டியில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பலருடைய வாக்குகளை நீக்கியதின் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது என்றும், மெஞ்ஞானபுரம், நாசரேத் போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் எங்கள் வாக்குகளை நீக்க சொன்னது யார்? ஏன் நீக்கினீர்கள் என்ற கேள்விகளை குருமார்களிடம் வைத்துள்ள போது, செய்வதறியாமல் திகைத்த குருமார்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுத்து, இதனை செய்ய வைத்தார்கள் என குருமார்கள் புலம்பியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது லே செயலாளர் பதவிக்கு எஸ் டி கே ராஜன் அணி சார்பாக ஜெபசந்திரன் அறிவிக்கபட்ட நிலையில் எஸ் டி கே ராஜன் அணியை எதிர்த்து, DSF & மோகன் அணி சார்பில் டிஎஸ்எப் கிப்சன் லே செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என பேசப்படுகிறது.
நாசரேத் திருமண்டலத்தில் லே செக்ரடரியாக 4 வருடங்களும், பொருளாளராக 3 வருடங்களும், சுமார் 7 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளார் மோகன். இவர் நாசரேத் திருமண்டல பேராலயத்தில் சிறப்பான நிர்வாகத் திறமையால் அனைவரால் பாராட்டப்பட்டவர். வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் திருமண்டல தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திருமண்டலத்தின் வளர்ச்சிப் பணிகள் மேம்படுவதற்காக முயற்சித்து வருகிறார். இவர்கள் அமைத்துள்ள கூட்டணியில் லே செயலாளர் பதவிக்கு டிஎஸ்எப் கிப்சன் தான் பொருத்தமானவர் என திர்மாணித்து, அவரை லே செயலாளர் பதவிக்கு போட்டியிட முன்மொழிவதற்கு மோகன் மற்றும் எஸ்.டி.ஆர் அணியினர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக டி.எஸ்.எப் கிப்சன் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் னுளுகு அணி ஆதரவாளர்கள், எஸ்டிஆர் பொன்சீலன் ஆதரவாளர்கள் மற்றும் 6 சபை மன்றங்களில் இருந்தும்; திரளான முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நாசரேத் பேராலயத்தில் இருந்து ஜெயசிங், தூத்துக்குடி பேட்ரிக்ஸ் இணை பேராலயத்திலிருந்து இன்ஸ்டின் கிருஷ்ணராஜபுரம் வட்டக்கோயில் ஆலயத்தில் இருந்து ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத் திருமண்டல தேர்தலில் லே செயலாளர் பதவிக்கு போட்டியிட இருக்கும் டி எஸ் எப் கிப்சன் பெயர் ஒரு சில தினங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . அதற்கு முன்னோட்டமாக நேற்று முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தங்கள் அணி வலுவானதாக இருக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகளை DSF அணியினர் & மோகன் அணியினர் வகுத்து வருகின்றன. நாசரேத் திருமண்டல தேர்தலில் தங்கள் அணி வெற்றிபெற்றால் திருமண்டல நலன் காக்கும் வகையில் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை அறிக்கையாக தயார் செய்வது அனைத்து கிறிஸ்தவர்கள் மத்தியில் எடுத்துச் சென்று தங்கள் அணிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர் டிஎஸ்எப் அணியினர் இரு தினங்களில் லே செயலாளர் பதவிக்கு மோகன் அணி மற்றும் டிஎஸ்எப் அணி மற்றும் எஸ்டிஆர் அணி ஆகிய முக்கிய அணிகளின் சார்பில் டிஎஸ்எப் கிப்சன் அவர்கள் லே செயலாளர் வேட்பாளராக தூத்துக்குடி நாசரேத்தில் வைத்து இரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என பேசப்படுகிறது வேட்பாளர் அறிவித்த மறுநிமிடமே தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வலுவான கூட்டணியாகவும், நிர்வாக திறன் அடங்கிய நபர்கள் அனைவரையும், ஒன்றிணைத்து வருகிற திருமண்டல தேர்தலை சந்திக்க முன்னாள் லே செயலாளர் மோகன், டிஎஸ்எப் அணி, எஸ்.டி.ஆர் மற்றும் வட்டக்கோயில் ஜான்சன், தூத்துக்குடி பேட்ரிக்ஸ் இணை பேராலயத்தில் உள்ள இன்ஸ்டின் மற்றும் 6 சபை மன்றங்களில் இருந்தும் பல முக்கிய பிரமுகர்கள் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.
செய்தி: நமது நிருபர்


