• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாலாட்டின்புதூர் பகுதியில் ஒருவர் கொலை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை.

policeseithitv by policeseithitv
July 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாலாட்டின்புதூர் பகுதியில் ஒருவர் கொலை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளமேகம் (60) மற்றும் அவரது மனைவி ரெஜினா (47) ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் 11.07.2021 காளமேகம் மற்றும் அவரது மனைவி ரெஜினா ஆகிய இருவரும் அவரகளது வீட்டில் மர்மநபர்களால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் கிடந்துள்ளனர். இதில் ரெஜினா சம்பவ இடத்தில் இறந்துள்ளார்.

இதுகுறித்து நேற்று (12.07.2021) தகவலறிந்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெஜினாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார். விசாரணையின் போது கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (74) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கருப்பசாமிக்கும் காளமேகத்திற்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  11.07.2021 கருப்பசாமி, காளமேகத்தின் வீட்டிற்கு சென்று காளமேகம் மற்றும் அவரது மனைவி ரெஜினாவை முன்விரோதம் காராணமாக இரும்பு கம்பியால் தாக்கியதில் ரெஜினா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 1700 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 2 வாகனங்கள் பறிமுதல் – ஒருவர் கைது

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In