சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மணிமண்டபத்தில் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 1710-இல் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் பிறந்தார். கட்டாலங்குளத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மார்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி S. அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தம்பா உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவு மண்டப நுழைவுவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் இன்று (11.07.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 650 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

