• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

போக்சோ உட்படஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5பேர் கைது

policeseithitv by policeseithitv
July 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தாளமுத்துநகர்  பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா நகர் பகுதியை சேர்ந்த பொய்யாமொழி மகன் ரவி (எ) பொன்பாண்டி என்பவரை முன்விரோதம் காரணமாக 18.06.2021 அன்று மாதா நகர் பகுதியில் வைத்து தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்த தங்கபழம் மகன் அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ் (41), சிலுவைப்பட்டி கணபதி நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஜோதிராஜா (35) மற்றும் ஆத்தூர் தலைவன் வடலி பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (21) மற்றும் இவர்களது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ், ஜோதிராஜா, மதன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் ஏற்கனவே அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ் மற்றும் ஜோதிராஜா ஆகியோர் 01.07.2021 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் மற்றொரு முக்கிய எதிரியான மதன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி அவர்களும்,
கடந்த 18.06.2021 அன்று கயத்தார் தெற்கு ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் காளீஸ்வரன் (25) என்பவர் 4 ½ வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தயார் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காளீஸ்வரனை கைது செய்துள்ளனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான காளீஸ்வரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி எஸ்பிக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த 17.06.2021 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மட்டகடை பஜார் பகுதியில் வந்த ஓருவரை மட்டக்கடை வடக்கு ராஜா தெருவை சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (25) மற்றும் தூத்துக்குடி கான்வென்ட் ரோடு பகுதியை சேர்ந்த ரோசாரி மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (எ) டைட்டஸ் (24) ஆகியோர் கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிம்சன் மற்றும் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (எ) டைட்டஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரிகளான சிம்சன் மற்றும் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (எ) டைட்டஸ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் எஸ்பிக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த 06.06.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையாபுரம் ரோடு பகுதியில் வந்த ஒருவரிடம் தூத்துக்குடி 3ம் மைல் இந்திரா நகரை சேர்ந்த வேல்ச்சாமி மகன் காளியப்பன் (எ) காடைகாளி (25) மற்றும் இவரது நண்பர்கள் சேர்ந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பன் (எ) காடைகாளி மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான காளியப்பன் (எ) காடைகாளி என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன்  எஸ்பிக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  5பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு  பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் 5 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் எதிரிகள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்‌.
Previous Post

கொரனா குறும்பட விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசு வழங்கினார்

Next Post

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Next Post
தமிழக பத்திரிகையாளர் அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் -தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In