தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 02.07.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 எதிரிகளை புகார் கிடைத்த சில மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து கைது செய்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன், உதவி ஆய்வாளர் . முத்துமாலை, சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் ஞானகுரு, முதல்நிலைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துசெல்வன் மற்றும் அமிர்தசெல்வன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 01.07.2021 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலை சம்பவம் நடந்த அன்றே 4 எதிரிகளை கைது செய்த திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், திருச்செந்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் இசக்கிமுத்து, திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய தனிப்பிரிவு காவலர் ராமர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை கொண்டு சென்ற எதிரிகள் இருவரை கைது செய்து, 100 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியன், முதல் நிலை காவலர்கள் ஜான்சன், கார்த்திகேயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை மற்றும் வைப்பாற்று பகுதியில் இரவு ரோந்து செல்லும் பொழுது சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய மூன்று எதிரிகளை கைது செய்து டிப்பர் லாரி, ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த குளத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா, முதல் நிலை காவலர் செல்வகுமார், காவலர் பாலமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 02.07.2021 அன்று சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் இருவரை சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் கைது செய்த சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் ஜெபராஜ், பாண்டியராஜன், பால்பாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
2 காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தனர்.

