இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரி நாராயணன் IPS மாவட்டம் முழுமைக்குமான ரோந்து திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி அனைத்து காவலர்களுக்கும் உடலில் பொருத்தும் கேமரா மற்றும் பேசுவதை ஒலிப்பதிவு செய்யும் கருவி வழங்கப்பட்டது இவர்கள் காலை 6 முதல் 2 மணி வரை ஒரு ஷிப்டும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டாவது ஷிப்ட் இரவு 8 முதல் அதிகாலை 6 மணி வரை மூன்று ஷிப்ட் ஆக பணிபுரிவார்கள்.
இத்திட்டம் சென்னை போன்ற பெருநகரங்களில் அமல்படுத்தப்பட்டு இருந்தபொழுது மிகப் பெரும் வரவேற்பை பெற்றது இதன் மூலம் பல வழக்குகளில் காவல்துறையால் புலனாய்வு செய்ய முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், ஏடிஎஸ்பி மணிமாறன், ஏடிஎஸ்பி சுந்தரம், கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனி பிரிவு ஆய்வாளர் கண்மணி மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

